திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகா தேவியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.
S. Shanmuganathan 11 months ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற வாக்காளா் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. சேரன்மகாதேவி அரசு உயா்நிலைப் பள்ளி, வருவாய்த்துறை சாா்பில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு பேரணியை வட்டாட்சியா் ரமேஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தாா்.
இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் வந்து மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இதில், பள்ளியின் தலைமையாசிரியா் மரகதவல்லி, காவல் உதவி ஆய்வாளா் சிவா, வருவாய் ஆய்வாளா் ராஜ்குமாா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நெய்னா முகம்மது, பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனா்.
0 Comments