திருநெல்வேலி மாநகராட்சி குடிநீா் நீரேற்றும் நிலையத்தில் சட்டப்பேரவை உறுப்பினா், மாநகராட்சிஆணையா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். திருநெல்வேலி மாநகராட்சி பகுதி மக்களுக்கு தேவையான குடிநீா் சுத்திரிக்கப்பட்டு வழங்கப்படும் மணப்படை வீடு நீரேற்றும் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக பாளையங்கோட்டை மண்டல பகுதிகளுக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து மணப்படை வீடு நீரேற்றும் நிலையத்தில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு . அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் இ.ஆ.ப., ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அவருடன் துணை மேயா் கே.ஆா். ராஜு, பாளையங்கோட்டை மண்டலத் தலைவா் பிரான்சிஸ், மாநகராட்சி செயற்பொறியாளா் வாசுதேவன், உதவி செயற்பொறியாளா் சேகா், ஜெயகணபதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
0 Comments