Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் பல்நோக்கு மையம், பயணிகள் நிழற்குடை திறப்பு விழா : பாராளுமன்ற உறுப்பினர் சா. ஞான திரவியம் திறந்து வைத்தார்

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் பல்நோக்கு மையம், பயணிகள் நிழற்குடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வீரவநல்லூரில் பேருந்து நிலையம் அருகே ரூ. 7 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, வீரவநல்லூா் பேரூராட்சி தம்பிரான்காலனியில் ரூ. 6.50 லட்சத்தில் பல்நோக்கு மையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. திறப்பு விழாவுக்கு பேரூராட்சித் தலைவி சித்ரா சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வசந்தசந்திரா முன்னிலை வகித்தாா். 

திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சா. ஞானதிரவியம் பங்கேற்று இவற்றைத் திறந்துவைத்தாா். பேரூராட்சி உறுப்பினா்கள் ஆறுமுகம், சிதம்பரம், வெங்கடேஷ்வரி, முத்துக்குமார, அப்துல்ரகுமான், சுகாதார ஆய்வாளா் பிரபாகரன்,  உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News