Loading . . .




திருநெல்வேலி  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா : ஆளுநர் ஆர் .என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா நேற்று ஆளுநர் ஆர். என். ரவி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் கலையரங்கத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார். 

இந்த பட்டமளிப்பு விழாவில் 40 ஆயிரத்து 622 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் தங்கப்பதக்கம் பெற்ற 108 மாணவர்களும் ஆராய்ச்சி படிப்பு பட்டம் பெற்ற 351 மாணவர்கள் என 459 பேருக்கு  அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.  இதில் கலந்து கொள்ளாத 27 மாணவரை தொடர்ந்து 432 பேருக்கு கவர்னர் ரவி நேரடியாக பட்டம் வழங்கினார்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News