திருநெல்வேலியில் இரண்டாம் நிலை காவலர்காண உடற்தகுதி தேர்வு
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான உடல் தகுதி தேர்வு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார் இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியான விண்ணப்பதாரர்கள் மொத்தம் 898 பேருக்கு உடல் தகுதி தேர்வு 06.02.2024 முதல் 10.02.2024 வரை நடைபெற உள்ளது. அதன்படி 06.02.2024 அன்று 469 விண்ணப்பதாரர்களுக்கும், 07.02.2024 அன்று 438 விண்ணப்பதாரர்களுக்கும் உடற் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சிபெறும் விண்ணப்பதார்கள் அடுத்த 3 நாட்களில் நடைபெறும் உடற் திறன் தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
0 Comments