ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
The Forecast 2 years ago ஈரோடு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சு.முத்துசாமி , ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா, இ.ஆ.ப.,
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 37,305 சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 3,00,583 மகளிர் பயன்பெறும் வகையில் 2,504 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாகனங்களில் ஏற்றிச் சென்று விற்பனை செய்திடும் வகையில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் 100 - மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் வழங்குதல் தொடக்கமாக இன்று ஈரோடு மாவட்டத்தில், 2,337 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 20,518 உறுப்பினர்களுக்கு ரூ.100.34 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் 6 மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் சாவிகள் வழங்குதல், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.129.92 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 46 புதிய திட்டப்பணிகள் திறந்து வைத்தும், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.6.16 கோடி மதிப்பீட்டில் 32 புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில் 9,948 பயனாளிகளுக்கு ரூ.70.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., செயல் இயக்குநர் ஸ்ரேயா பி சிங், இ.ஆ.ப., ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0 Comments