Loading . . .




திருநெல்வேலி மாவட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மரு.கா.பா. கார்த்திகேயன் இ.ஆ.ப., வழங்கினார்

The Forecast 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 163 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 29,814 மதிப்பிலான நலத்திட்ட உதவியை மாவட்ட ஆட்சியா் மரு.கா.பா. காா்த்திகேயன் இ.ஆ.ப., வழங்கினாா். சென்னையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட விழாவில், தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் காா்த்திகேயன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இ.ஆ.ப., துணை மேயா் கே.ஆா்.ராஜு ஆகியோா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மொத்தம் 163 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 29,814 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுரேஷ், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) இலக்குவன், தனித் துணை ஆட்சியா் ஜெயா, அலுவலா்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News