திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியை முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் மாரிமுத்து இ. வெ.ப., தொடங்கி வைத்தார்
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மாரிமுத்து இ. வெ.ப., மற்றும் அரசு அலுவலர்கள்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இந்தாண்டுக்கான பருவ மழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் நேற்று (21-ந்தேதி) தொடங்கியது.
இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு தலையணையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மாரிமுத்து இ. வெ.ப., செல்போன் மற்றும் உபகரணங்களை கணக்கெடுப்பு குழுவினருக்கு வழங்கினார். அதன் பின் வனத்துறை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு, களக்காடு வனசரகத்திற்கு 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்திற்கு 8 குழுவினரும், கோதையாறு வனசரகத்திற்கு 5 குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
0 Comments