Loading . . .




தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற பெண் காவலருக்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் பா . மூர்த்தி இ.கா.ப.,பாராட்டு

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

தேசிய அளவில் 44 வது மாநில மூத்தோர் தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 13-02-2024 முதல் 17-02-2024 வரை நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் முதல் நிலை காவலர் 1515 ரேணுகாதேவி அவர்கள் கலந்துக்கொண்டு 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கத்தையும், 1500 மீட்டர் பிரிவில் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார், மேலும் தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக வரும் ஜூலை மாதம் ஸ்வீடன் நாட்டில், சர்வதேச அளவில் நடக்கவிருக்கும் தடகள போட்டிக்கு தேர்ச்சி பெற்ற காவலர் ரேணுகாதேவி அவர்களை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., 24-02-2024 ஆம் தேதி நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும் மேலும் சர்வதேச அளவில் பதக்கம் வென்று வர தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். உடன் மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள் சுனை முருகன், பால்தாய்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News