திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ரூபாய் 15 கோடி அளவிற்கான திட்ட பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினாா்
The Forecast 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்துவதற்கு ரூ. 15 கோடியில் திட்டப்பணிகளை மேற்கொள்ள அடிக்கல் நாட்டப்பட்டது. இதையொட்டி, அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் இ.ஆ.ப., தலைமை வகித்தாா்.
திருநெல்வேலி எம்.பி. சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை எம்எல்ஏ மு.அப்துல் வகாப், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின் இ.ஆ.ப., ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பணிக்கான அடிக்கல்லை நாட்டினாா். மேலும், பொது சுகாதாரம் - நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், பழவூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.90 லட்சத்தில் கூடுதல் கட்டடம், வைராவிகுளத்தில் ரூ. 22.75 லட்சத்திலும், பத்தமடையில் ரூ. 25 லட்சத்திலும் செவிலியா் குடியிருப்பு, பத்தமடையில் ரூ.25 லட்சத்தில் மருத்துவ அலுவலா் குடியிருப்பு, பாளையங்கோட்டை சமதானபுரத்தில் ரூ. 22 லட்சத்தில் பொது சுகாதார ஆய்வகம் ஆகியவற்றை அவா் திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் இயக்குநா் (பொது சுகாதாரத்துறை) ஏ.சோமசுந்தரம், இணை இயக்குநா் (தொற்று நோய்கள்) எம்.செந்தில்குமாா், இணைஇயக்குநா் (நலப்பணிகள்) லதா, துணை இயக்குநா் சுகாதாரப்பணிகள் பொற்செல்வன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
0 Comments