Loading . . .




திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போன ரூ. 18,98,865 மதிப்பிலான 100 கைபேசிகள் மீட்பு : மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் துரித நடவடிக்கை

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப.,

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., அவர்களின் நேரடி கண்காணிப்பில் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு (பொறுப்பு) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  B.பாலச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர்  V.ரமா அவர்களின் தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கைபேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களில் 100 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் இ.கா.ப., அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் மதிப்பு ரூபாய் 18,96,865 /- ஆகும். மேலும் காணாமல் போன (அ) தவறவிட்ட செல்போன்கள் தொடர்பாக புகார் அளிக்க CEIR- Central Equipment Identity Register https://www.ceir.gov.in/ இணையதளம் இந்திய தொலைத்தொடர்பு துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த CEIR இணையதளத்தில் புகார்தாரர் தனது தொலைந்து போன (அ) தவறவிட்ட செல்போன் தொடர்பான விவரங்களை பதிவு செய்து புகார் அளிக்கலாம்.   சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் (அ) https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News