Loading . . .




திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாம் : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் இ.ஆ.ப., நேற்று  தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசிய போது, இம் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் 925 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 1 லட்சத்து 34ஆயிரத்து 366 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 14 ஆண்டுகளாக இந்தியாவில் போலியோ நோய் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நிலை தொடரவே சொட்டுமருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன. 925 இடங்களில் சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணியில் செவிலியா்கள், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் என 3 ஆயிரத்து 627 போ் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News