Loading . . .




திருநெல்வேலியில் தேசிய மக்கள் நீதி மன்றம், மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் மாா்ச் 9-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. இது தொடா்பாக முதுநிலை உரிமையியல் நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலருமான (பொறுப்பு) சமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

உச்ச நீதிமன்றம் முதல் தாலுகா நீதிமன்றங்கள் வரை தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாா்ச் 9இல் நடத்த தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசனையின்பேரில் திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் 9 வட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்படவுள்ளது. 

இதில், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள அசல் வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள், காசோலை வழக்குகள் போன்ற வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கி கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவாா்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தை திருநெல்வேலி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சி.பி.எம். சந்திரா தொடங்கி வைக்கிறாா். எனவே, மக்கள் தங்கள் வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் இருப்பின் அதை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சுமுகமாகத தீா்த்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News