திருநெல்வேலி மாநகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் : மாநகராட்சி மேயர் பி. எம். சரவணன் தகவல்
S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மேயா் பி.எம்.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளது. ராஜாஜி மண்டப கூட்டரங்கில் நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டமும், சாதாரண கூட்டமும், அவசரக் கூட்டமும் நடைபெற உள்ளன எனக் கூறியுள்ளாா்.
0 Comments