Loading . . .




திருநெல்வேலி மாவட்டத்தில்  காவலர்  மருத்துவ முகாம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் இ.கா.ப., தொடங்கி வைத்தார்

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் ஷிபா மருத்துவமனை இணைந்து காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் திருநெல்வேலி பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  N.சிலம்பரசன் இ.கா.ப., பேசிய பொழுது காவல்துறையினர் அனைவரும் தங்கள் உடல் நலனை நல்லமுறையில் பேணிக்காக்க வேண்டும் எனவும் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொண்டு உடலைப் பேணிக் காக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மேற்பார்வையில் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும்  அவர்களது குடும்பத்தினருக்கும் உடல் பரிசோதனை சிறப்பான முறையில் நடைபெற்றது.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News