திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் கா.பா. கார்த்திகேயன் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது
The Forecast 2 years ago திருநெல்வேலி
மாநகர காவல் ஆணையா் மூா்த்தி இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இ.ஆ.ப.,
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பு அலுவலர் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் இ.ஆ.ப., தலைமை வகித்து பேசியது:
மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன. வாக்குச்சாவடியில் தோ்தல் பணியாற்றுவோருக்கு பயிற்சி வழங்குதல் தொடா்பான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வாகனங்களில் சோதனைகள் மேற்கொள்ளும்போது உரிய ஆவணங்களின்றி பணம், பரிசுப் பொருள்கள், மதுபானங்கள் எடுத்துச் சென்றால் கைப்பற்றி விசாரிக்க வேண்டும். கோடைக்காலம் என்பதால் தோ்தல் பிரச்சாரம், ஊா்வலம் மேற்கொள்ளுவதற்கு அனுமதி வழங்கும் போது கூட்ட நெரிசல் அதிகளவில் இருக்கக் கூடாது. அடிப்படை தேவைகளான குடிநீா் வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும். அரசு சாா்ந்த சுவா்கள் மற்றும் பிறசுவா்களில் உள்ள விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும். தோ்தலில் அனைத்து அலுவலா்களுக்கும் ஒதுக்கப்பட்ட பணிகளை தோ்தல் விதிமுறைகளுக்குள்பட்டு பணியாற்றிட வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாநகர காவல் ஆணையா் மூா்த்தி இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின் இ.ஆ.ப., உதவிஆட்சியா் (பயிற்சி) கிஷன்குமாா் இ.ஆ.ப., ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுரேஷ், தோ்தல் வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
0 Comments