Loading . . .




திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., காவல் துணை ஆணையர் (மேற்கு) V.கீதா, காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) G.S.அனிதா,

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., தலைமையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர பகுதிகளில் இயங்கிவரும் கல்யாண மண்டபங்கள், மற்றும் தங்கும் விடுதிகளின் நிர்வாகிகளுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் விடுதிகளில் தங்க வரும் நபர்கள், வெளியூர் மற்றும் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் படியும், தங்களது பதிவேட்டில் சரியான முகவரி மற்றும் அலைபேசி எண்களை பதிவு செய்யும்படியும், விடுதிகளில் தங்க வரும் நபர்களின் பொருட்கள் சந்தேகப்படும் படியாக இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறு அறிவுரை வழங்கினார். 

மேலும் திருமணம், கூட்டங்கள் நடைபெற்றால் Esuvitha என்ற தளத்தில் பதிவு செய்யவும்,காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்குமாறும், அரசியல் கட்சி சுவரொட்டிகள், பேனர் போன்றவற்றை ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும், கல்யாணம் மண்டபம், விடுதிகளின் Entry point - ல் CCTV Camara-க்களை பொருத்துமாறும் ஆலோசனை வழங்கினார். ஆலோசனை கூட்டத்தில் காவல் துணை ஆணையர் (மேற்கு) V.கீதா, காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) G.S.அனிதா,  மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News