Loading . . .




திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார் 

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடங்கிய நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இத்தோ்வை 22 ஆயிரத்து 393 மாணவ- மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இத்தோ்வு தொடா்ந்து ஏப்ரல் 8 ஆம் தேதி வரை தோ்வு நடைபெறுகிறது. 94 மையங்களில் முதல் நாள் நடைபெற்ற தமிழ்த் தோ்வை 22 ஆயிரத்து 392 போ் எழுதினா். 

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் இ.ஆ.ப., ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முத்துசாமி, பறக்கும் படையினா் உடனிருந்தனா். தோ்வையொட்டி தடையற்ற மின்சாரம், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை செய்யப்பட்டிருந்தன.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News