திருநெல்வேலியில் காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் மத்திய பாதுகாப்பு படையினருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு. கா.ப. கார்த்திகேயன் இ.ஆ.ப., முன்னிலையில் நடைபெற்றது
The Forecast 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திருநெல்வேலி மக்களவை தொகுதி தேர்தலில் காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் மத்திய பாதுகாப்பு படையினருடனான ஆலோசனைக் கூட்டம், தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மாநகர காவல் துணை ஆணையாளர் அனிதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினருக்கான இணைய வழி தேர்தல் பணி ஒதுக்கீடு தேர்தல் காவல் பார்வையாளர் பங்கஜ் நைன், இ.கா.ப., , முன்னிலையில் நடைபெற்றது.
மேலும், நெல்லை மக்களவை தொகுதியில் பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி நடைபெற்றது. பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய தொகுதிகளுக்கான பயிற்சி வகுப்புகள் தபால் வாக்குகளை பெறுவதற்கான சிறப்பு மையங்கள் ஆகியவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., பார்வையிட்டார்.
0 Comments