திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் தீத் தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
S. Shanmuganathan 7 months ago திருநெல்வேலி
தீ தொண்டு வார விழாவையொட்டி, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அரசு மருத்துமனையில் தீ விபத்தை தடுப்பது தொடா்பான விழிப்புணா்வு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலா் பலவேசம் தலைமை வகித்தாா்.
மருத்துவமனையில் திடீரென தீ விபத்து நிகழ்ந்தால் எவ்வாறு தீயை அணைக்க வேண்டும், மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள், பணியாளா்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களுக்கு தீயணைப்பு படை வீரா்கள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் பேரிடா் மற்றும் தீ விபத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது, மீட்பு அழைப்பு சேவைகளை எப்படி பயன்படுத்துவது ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
0 Comments