Loading . . .




திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பூச்சித் துளைப்பாணை கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம்

S. Shanmuganathan 7 months ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதிகளில் காய்கனிகளில் பூச்சி துளைப்பானை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இளங்கலை பயின்று வரும் மாணவிகள் சேரன்மகாதேவி பகுதியில் தங்கியிருந்து கிராமப்புற வேளாண்மை பயிற்சி பெற்று வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக சேரன்மகாதேவி பகுதியில் சாகுபடி செய்துள்ள காய்கனி வயல்களில் முகாமிட்டு களஆய்வு மேற்கொண்ட மாணவிகள், காய்கனிகளை துளைக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.  

மேலும், பேராசிரியா்கள் காளிராஜன், இளஞ்செழியன், ஜெயலட்சுமி, மாணவிகள் அபிதா, மோனிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News

Latest News