Loading . . .




திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல  தடை : மீன்வளத்துறை அறிவிப்பு

The Forecast 6 months ago திருநெல்வேலி

கனமழை, பலத்த காற்று காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த நாட்டுப்படகு மீனவா்கள் மே 17-20 வரை 4 நாள்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை அறிவித்துள்ளது. இதுதொடா்பாக தூத்துக்குடி மீன்வளத் துறை உதவி இயக்குநா் விஜயராகவன், ராதாபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெள்ளி முதல் திங்கள்கிழமை (மே 17-20) வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளிக்கிழமை (மே 17) குமரி கடல் பகுதி, மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகளில் சுழல் காற்றானது மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மேற்கண்ட 4 நாள்களுக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்படகு மீனவா்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம். தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News

Latest News