திருவாரூரில் சூரிய மின் உற்பத்திப் பூங்கா திட்டம்: அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்
The Forecast 3 years ago மின்சார துறை
திருவாரூரில் சூரிய மின் உற்பத்திப்பூங்கா திட்டம்: அமைச்சர்வி.செந்தில் பாலாஜி தகவல்திருவாரூரில் சூரிய மின் உற்பத்திப்பூங்கா திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை, க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்)
எழுப்பினார். இதற்கு, மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அளித்த பதில்:-
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சூரியமின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழ்நாட்டின் முதல் சூரிய மின் உற்பத்திப் பூங்கா திட்டத்தை, திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
0 Comments