தமிழ்நாட்டில் முதல்முறையாக சூரிய ஒளி மூலம் 4,564 மெகாவாட் மின் உற்பத்தி: அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்
The Forecast 3 years ago மின்சார துறை
தமிழகத்தின் காலநிலை சூரிய ஒளி மின் உற்பத்திக்கு சாதகமாக உள்ளது. இதன்படி, பெரும்பாலான தனியார் நிறுவனங்களால் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 17.000 மெகாவாட் மின்சாரம் தேவையாக உள்ளது. கடந்த ஆண்டு செப்.3ம் தேதி கணக்கீட்டின் படி, சூரிய மின் உற்பத்தி 3,658 மெகாவாட் இருந்தது. தற்போதைய சூரிய மின் உற்பத்தி தொடர்பான புதிய தகவலை அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: மின் துறையில் இதுவரை இல்லாத அளவில், சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி கடந்த 13ம் தேதி 4.564 மெகாவாட் உற்பத்தியாகி உச்சம் தொட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
0 Comments