ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்..!
The Forecast 3 years ago ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அதிமுகவில் நடைபெறும் உச்சக்கட்ட குழப்பத்தால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சி இருக்கும் வரை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட்டு வந்தனர். ஆனால் ஆட்சி முடிவுக்கு வந்த பின்பு ஒற்றைத் தலைமை யார் என்று எழுந்த பஞ்சாயத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரு அணிகள் சார்பிலும் தனித்தனியே வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
சென்றுள்ளனர். அவர்கள், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் கடிதத்தை இன்று பிற்பகல் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைந்தனர். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. அதில்; அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தமிழ்மகன் உசேனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த அதிகாரம் குறுகிய காலத்துக்கு, அதாவது இந்த இடைத்தேர்தலுக்கு மட்டுமே என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியுள்ளது.
0 Comments