100 சதவீத தேர்ச்சி பெற்ற 89 பள்ளிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை அமைச்சர் செ.முத்துசாமி வழங்கினார்
The Forecast 2 years ago ஈரோடு
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 அரசு பொதுப்பள்ளியில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா இ.அ.ப, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாநகராட்சி மேயர் எஸ்.நாகரத்தினம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செ.முத்துசாமி கலந்து கொண்டு, 100 சதவீத தேர்ச்சி பெற்ற 89 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும், 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் . இராதா கிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விபத்தில் தாய், தந்தையை இழந்த தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 10 மாணவ, மாணவிகளுக்கு விபத்து காப்பீட்டு நிதியுதவியாக தலா ரூ.75 ஆயிரம் அசல் ஆவணங்களை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், முதன்மை கல்வி அலுவலர் குஷிதா ராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் புருஷோத்தமன், திருநாவுக்கரசு, ஜோதிசந்திரா, ரவிச்சந்திரன் உட்பட பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments