10 வாரங்களில் 10,000 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்த தமிழக அரசு மற்றும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டம்
The Forecast 2 years ago மக்கள் நல்வாழ்வுத்துறை
சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற அக்.29 தொடங்கி நவ.5, நவ.11, நவ.19, நவ.26, டிச.3, டிச.10, டிச.17, டிச.24, டிச.31 அதாவது அக்டோபர் மாதம் முதல் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சில குறிப்பிட்ட 10 வாரங்களில் உள்ள ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் 1000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதனால், டிசம்பர் மாதம் இறுதிக்குள் பத்து வாரங்களில் 10,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம்கள் 10,000 இடங்களில் 10 வாரங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுவது என்பது மருத்துவத்துறை வரலாற்றில் இதுவே முதன்முறை. எனவே பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்புகள், சளி, தொண்டை வலி போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் ஏதாவது பாதிப்புகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
0 Comments