உலகம் முழுவதும் xbb என்ற வைரஸ் கூடுதலாக பரவிவருகிறது: மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
The Forecast 3 years ago மக்கள் நல்வாழ்வுத்துறை
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்; “விமான நிலையத்தை பொருத்தவரை ஒன்றிய அரசு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இரண்டு சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய சொல்லி உள்ளனர். தற்போது வரை இந்த நடைமுறைதான் தொடர்ந்து வருகிறது. புதிதாக எதுவும் அறிவுறுத்தப்பட்டால் அதை பின்பற்றுவோம்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு மதுரை, சென்னை, கோவை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமானங்களில் வெளிநாடுகளில் பயணிகளுக்கு சோதனை மேற்கொண்டதில் இரண்டு நாட்கள், மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. உலகம் முழுவதுமே xbb என்கிற வைரஸ் கூடுதலாக பரவி வருகிறதால் வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களுக்கான இரண்டம் பரிசோதனை மேற்கொண்டதில் 8 முதல் 10 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. பெரிய அளவிலான பாதிப்பு இல்லை, இந்த நோய் உள்ளவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த கொரோனா பாதிப்பு தீவிர சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அளவிற்கு, ஆக்சிஜன் வைக்க வேண்டும் என்ற அளவிற்கு இல்லை என்று கூறியுள்ளார்.
இதுவரை தமிழ்நாடு அளவில் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 11 ஆயிரத்து 333 மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், நோயாளிகள் பார்வையாளர்கள் 1ம் தேதியிலிருந்து முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி, அதை உறுதிப்படுத்தி உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
0 Comments