Loading . . .




மருத்துவம் மற்றும் பக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து

The Forecast 3 years ago மக்கள் நல்வாழ்வுத்துறை

தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (26.4.2022) தலைமைச் செயலகத்தில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் சந்தித்து, உலக மலேரியா தினத்தையொட்டி 25.4.2022 அன்று புதுதில்லியில் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகந்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், மலேரியாவை கட்டுப்படுத்த சிறந்த முறையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக தமிழ்நாடு அரசிற்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் / சிறப்பு பணி அலுவலர் முனைவர் ப.செந்தில்குமார். இ.ஆ.ப, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் மரு. டி.எஸ்.செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.


0 Comments

Post your comment here

மக்கள் நல்வாழ்வுத்துறை Relateted News