முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்-அமைச்சர் . மா. சுப்பிரமணியன் அவர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., முன்னிலையில்
The Forecast 2 years ago மக்கள் நல்வாழ்வுத்துறை
சென்னை, மெரினா கடற்கரை லூப் சாலை, டூமிங் குப்பத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் . அவர்கள், தலைமைச் செயலாளர் அவர்கள் ஆகியோர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கிவைத்து பார்வையிட்டார்கள். இந்த நிகழ்வின்போது, சட்ட மன்ற உறுப்பினர் .த.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் .ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா,இ.ஆ.ப., தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் திரு.கோவிந் ராவ், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments