மருத்துவ துறை கோரிக்கை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் ஒன்றிய அரசின் ஆயுஷ்துறை அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தாவிடம் வழங்கினார்
The Forecast 3 years ago மக்கள் நல்வாழ்வுத்துறை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, (06.09.2022) மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அவர்கள்
ஒன்றிய அரசின் ஆயுஷ்துறை அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனாவால் மற்றும் ஒன்றிய அரசின்
சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சார்பாக அரசு செயலாளர்
.ராஜேஷ் பூஷன் ஆகியோரிடம் மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத்துறை தொடர்பான கோரிக்கையினை புதுடெல்லியில் இன்று அளித்தார்
ஒன்றிய அரசின் ஆயுஷ்துறை அமைச்சர் திரு.ஸ்ரீ சர்பானந்தா
சோனாவால் அவர்களிடம் அளித்த கோரிக்கைகள் பின்வருமாறு:-
மதுரை மாவட்டம், அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும்
மருத்துவமனையின் கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ள நிலையில் அதனை
மறுகட்டமைப்பு செய்ய நிதிஒதுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழ்நாட்டில்
அமைக்க விரைந்து ஒப்புதல் வழங்குமாறு கோரிக்கை.
ஒன்றிய அரசின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை
அமைச்சர் சார்பாக அரசு செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன் அவர்களிடம்
அளித்த 8 கோரிக்கைகள் பின்வருமாறு:-
27.01.2019 அன்று மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ்
மருத்துவமனை விரைந்து முடித்து செயல்பாட்டிற்கு கொண்டுவர
கோரிக்கை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2வது எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ
ஒன்றிய அரசிடம் கோரிக்கை
மருத்துவக்கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் புதிய அரசு
மருத்துவக்கல்லூரி நிறுவ ஒன்றிய அரசின் 60:40 என்ற பங்களிப்புத்
திட்டத்தில் அனுமதி வழங்குமாறு கோரிக்கை
நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
சட்டமுன்வடிவு மீது மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின்
ஒப்புதலை விரைந்து பெற்றுத்தர கோரிக்கை
தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு
செவிலியர் கல்லூரி நிறுவ நிதி வழங்க கோரிக்கை
உக்ரைனில்
படித்த
மாணவர்கள்
இந்தியாவின்
மருத்துவக்கல்லூரிகளில் படிப்பில் தொடர வழிவகை செய்ய கோருதல்
மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளை
கைவிடுமாறு தேசிய மருத்துவக்குழுமத்திற்கு அறிவுறுத்தல் வழங்க
கோருதல்
தமிழ்நாட்டிற்கு தேசிய நலவாழ்வு குழுமம், பிரதம மந்திரியின்
ஆயூஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் மற்றும்
பதினைந்தாவது நிதி ஆணையம் ஆகியவற்றின் கீழ் 2022-2023
நிதியாண்டுக்கான முதல் தவணை நிதியை உடனடியாக விடுவிக்கக்
கோருதல் இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு
முதன்மைச் செயலாளர் .பா.செந்தில்குமார். இ.ஆ.ப அவர்கள் உடனிருந்தார்.
0 Comments