Loading . . .




தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'நலம் 365' யூ-டியூப் சேனல்

The Forecast 3 years ago மக்கள் நல்வாழ்வுத்துறை

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'நலம் 365' யூ-டியூப் சேனல் திங்கள்கிழமை (ஜன.2) முதல் தொடங்கப்படவுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கவுள்ளார்.

மாநில சுகாதார நலத் திட்டங்கள், மருத்துவக் கல்வி நடவடிக்கைகள், ஊரக மருத்துவ சேவைகள், தொற்று நோய் விழிப்புணர்வு, தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அதில் பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்கள், சேவைகளை பொது மக்களிடத்தில் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்களது நோக்கம்.

அதன்படி, ஏற்கெனவே பொது சுகாதாரத் துறைக்கென பிரத்யேக யூ-டியூப் சேனல் இயங்கி வருகிறது. தற்போது, அடுத்த கட்டமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முழுமையான செயல்பாடுகளை விளக்கும் வகையில் 'நலம் 365' சேனல் தொடங்கப்படவுள்ளது.

இதன் மூலம் துறை சார்ந்த முழுமையான தகவல்கள் அனைத்தும் மக்களிடையே கொண்டு சேர்க்கப்படும் என்றார் அவர்.


0 Comments

Post your comment here

மக்கள் நல்வாழ்வுத்துறை Relateted News