Loading . . .




கனமழையால் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன

The Forecast 2 years ago கல்வி

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பொழிந்து வரும் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும்  நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பை சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு இருந்து வருகிறது. மேலும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

கல்வி Relateted News