ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 1-10 ஆம் வகுப்பு வரையிலான 5450 தமிழ் பாடப்புத்தகங்களை கத்தார் வாழ் தமிழ் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்
The Forecast 2 years ago கல்வி
நேற்று சென்னையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கத்தார் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 1-10 ஆம் வகுப்பு வரையிலான 5450 தமிழ் பாடப்புத்தகங்களை கத்தர் தமிழர் சங்கத்திற்கு வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் ஆர். கஜலட்சுமி, இ.ஆ.ப., மற்றும் இணை இயக்குநர் சங்கர சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments