Loading . . .




திருநெல்வேலி உட்பட 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு

The Forecast 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலியில், கடந்த 17 மற்றும் 18-ந்தேதி பெய்த அதீத கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை குறைந்த பிறகு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளம் வடியத் தொடங்கியதும் பேருந்து, ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் திட்ட குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டதால்  5 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் செல்கிறது. ஆற்றுப்படுகையில் உள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும், குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. உறை கிணறுகளின் மின் மோட்டார்கள், நீரேற்றும் நிலையங்களும் வெள்ளத்திற்கு தப்பவில்லை. எனவெ அரசு விரைந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கூறினார்

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News