Loading . . .




திருநெல்வேலி நகர் பகுதியில் மேயர் பி. எம். சரவணன் ஆய்வு.

The Forecast 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆம் தேதிகளில் பெய்த மிக கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை பகுதிகளில் பலரது வீடுகள் பகுதியளவும், முழுமையாகவும் இடிந்து சேதமாகின. இந்நிலையில் திருநெல்வேலி நகரத்தில் பா்வதசிங்கராஜா தெரு, அக்கசாலை விநாயகா் கோயில் தெரு, காமாட்சியம்மன் கோயில் தெரு, அனவரத சுந்தர விநாயகா் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் மழையால் சேதமான சாலை, கழிவுநீரோடைகள், வீடுகளை ஆய்வு செய்தாா். சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். ஆய்வின்போது கிராம நிா்வாக அலுவலா் துரைக்குட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News