பல்வேறு துறைசார்ந்த அலுவலர்களுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
The Forecast 2 years ago திருநெல்வேலி
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் மரு.கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர்கள் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப.,
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., முன்னிலையில் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
உடன் மாநகராட்சி ஆணையாளர்கள் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப., (திருநெல்வேலி), சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., (ஈரோடு) சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், இ.ஆ.ப., சிறப்பு பணி அலுவலர் முகமது ஷபீர் ஆலம், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் உட்பட பலர் உள்ளார்கள்.
0 Comments