Loading . . .




திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு காவல் ஆணையர் C.மகேஸ்வரி இ.கா.ப., பாராட்டு.

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

தமிழ்நாடு போலீஸ் அகாடமி காவல்துறையினருக்கான அறிவு மற்றும் திறன் மேம்பாடுகள் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தி வருகின்றது. இந்நிலையில் 67 வது மாநில காவல்துறையினருக்கான திறன் போட்டி  (STATE POLICE DUTY MEET) கடந்த 20-11-2023 முதல் 24-11-2023 வரை நடைபெற்ற போட்டிகளில் கம்ப்யூட்டர் அவர்னஸ் (Computer Awareness) பிரிவில் திருநெல்வேலி மாநகர காவல் துறையை சேர்ந்த முதல் நிலைக் காவலர் அஜித் ஆறுமுகம் (எண் 946)  முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும், கம்ப்யூட்டர் ஆட்டோமேஷன், பிரிவில் (Computer Automation) முதல் நிலைக் காவலர் பாலன் (எண் 917)   மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

பதக்கம் வென்ற இருவரையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் C.மகேஸ்வரி இ.கா.ப.,  அவர்கள்  நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.  காவல் ஆய்வாளர்கள் சாம்சன், சண்முகவடிவு, ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News