Loading . . .




திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை தமிழக அரசின் தலைமை செயலா் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப.,

திருநெல்வேலி மாவட்டத்தில்  ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., ஆய்வு செய்தார். சீவலப்பேரி பகுதியில் தாமிரவருணி ஆற்றிலிருந்து பா்கிட் மாநகரம் கூட்டுக் குடிநீா் திட்டத்திற்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு மற்றும் குடிநீா் குழாய்கள் முழுவதுமாக சேதமடைந்தள்ளதையும், கங்கைகொண்டான் சிப்காட்டிற்கு தண்ணீா் செல்லும் குடிநீா் குழாய் முழுமையாக சேதமடைந்துள்ளதையும் பாா்வையிட்டாா். 

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடிநீா் எடுக்கும் உறைகிணறுகள் இரண்டு சேதமடைந்துள்ளதையும், மானூா் கூட்டுக் குடிநீா் திட்டத்திற்கு தண்ணீா் எடுத்துச் செல்லும் இரண்டு உறைகிணறுகள் சேதமடைந்துள்ளதையும் பாா்வையிட்டாா். சிவந்திப்பட்டி ஊராட்சி நெடுஞ்சான்குளம் கரையில் மழையால் ஏற்பட்ட உடைப்பையும், அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளையும் பாா்வையிட்டாா். 

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் சேதமடைந்துள்ள தாமிரவருணி மேம்பாலம், மேலநத்தம்-கருப்பந்துறை இடையேயான தாமிரவருணி தரைப்பாலம் ஆகியவற்றையும் பாா்வையிட்டு சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிா்வாக ஆணையருமான பிரபாகா் இ.ஆ.ப., மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலருமான செல்வராஜ் இ.ஆ.ப., குடிநீா் வழங்கல் வாரிய மேலாண்மை இணை இயக்குநா் வே.சரவணன், மாவட்ட ஆட்சியா் மரு.கா.ப.காா்த்திகேயன் இ.ஆ.ப., உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News