Loading . . .




களக்காடு தலையணையில் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையில் நீா்வரத்து குறைந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை அனுமதித்தனா். திருநெல்வேலி களக்காடு தலையணை பச்சையாற்றில் கடந்த 2 வாரங்களாக நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இங்குள்ள தடுப்பணையைத் தாண்டி வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்திருந்தனா். இந்த நிலையில் வெள்ளம் வடிந்து, தற்போது நீா்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை அனுமதித்தனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News