Loading . . .




வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கால்நடைகளை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ரூ.58.14 இலட்சம் மதிப்பிலான நிவாரணத் தொகையை அரசு வழங்கியது

S. Shanmuganathan 2 years ago திருநெல்வேலி

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப.,

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கால்நடைகளை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ரூ.58.14 இலட்சம் மதிப்பிலான நிவாரணத் தொகையினை 21 நபர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்கள்.

உடன் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப., மற்றும் துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் உடனிருதனர்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News