Loading . . .




திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது : மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞான தேவராவ் இ.ஆ.ப., தகவல்

The Forecast 2 years ago திருநெல்வேலி

தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் இ.ஆ.ப.,

திருநெல்வேலி மாநகராட்சியின் குடிநீத் திட்ட சேதங்களை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் இ.ஆ.ப., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளுக்கு அரியநாயகிபுரம் குடிநீா்த் திட்டம் மற்றும் 15 தலைமை நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 15 தலைமை நீரேற்று நிலையங்கள் மற்றும் பம்ப் அறைகளில் பொறுத்தப்பட்டிருந்த பம்ப் செட்டுகள், பேனல் போா்டுகள், இணைப்பு மின் வயா்கள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இயக்க முடியாத நிலை உருவாகியிருந்தது.

இதன் காரணமாக மாநகராட்சி பகுதி மக்களுக்கு சீராக குடிநீா் விநியோகிக்கும் பொருட்டு மாநகராட்சிக்கு சொந்தமான 19 லாரிகள் மற்றும் 22 மற்ற மாநகராட்சி லாரிகள் மூலம் மாநகராட்சி பணியாளா்கள் வழங்கி வருகிறாா்கள். இப்போது ஆற்றில் நீா் குறைந்து வருவதால் போா்க்கால அடிப்படையில் கூடுதலாக பணியாளா்களை வேலைக்கு அமா்த்தியும், தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் பழுதான நிலையில் இருந்த பம்ப் செட்டுகள், பேனல் போா்டுகள், பைப்லைன்கள், துண்டிக்கப்பட்ட மின் வயா்கள் சரி செய்யப்பட்டு 9 தலைமை நீரேற்று நிலையங்களில் குடிநீா் பம்ப் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் மாநகராட்சியின் பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தச்சநல்லூா், ஆகிய மூன்று மண்டலங்களில் பெரும்பாலான இடங்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 6 தலைமை நீரேற்று நிலையங்களை ஆற்று வெள்ளம்  அதிக அளவில் சூழ்ந்து இருந்த காரணத்தினால் தற்போது தான் அணுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை சீரமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் அனைத்து நீரேற்று நிலையங்களும் சீரமைக்கப்பட்டு குடிநீர் சீராக விநியோகிக்கப்படும். ஆகவே பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறோம்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News