Loading . . .




திருநெல்வேலி அருகே புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா : காணொளி காட்சி மூலம் முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

The Forecast 2 years ago திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஒன்றியம், மூலச்சி ஊராட்சியில் ரூ.29 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மூலச்சி ஊராட்சி உலுப்படிபாறை கிராமத்தில் ரூ.29 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலிக் காட்சி மூலம் புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்தாா். இதைத் தொடா்ந்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி வட்டார கல்வி அலுவலா்கள் அ. உமா சங்கா், வி. கீதா, சேரன்மகாதேவி ஒன்றியக்குழுத் தலைவி பூங்கோதை குமாா், பள்ளித் தலைமையாசிரியை பே.சு. அமுதா, பள்ளியின் இடைநிலை ஆசிரியை ச. ஜாக்கி வனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து ரூ.10 லட்சம் மதிப்பில் உலுப்படிப்பாறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி புதிய கட்டடத்தை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி பூங்கோதை குமாா் திறந்தாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்தையா, ராஜம், ஊராட்சித் தலைவி சமுத்திரக்கனி, வட்டார குழந்தைகள் திட்ட அலுவலா் ஜாஸ்மின், ஊராட்சி ஒன்றிய பொறியாளா்கள் அம்மையப்பன், கோமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

0 Comments

Post your comment here

திருநெல்வேலி Relateted News