திருநெல்வேலி அருகே மஞ்சள் பயிர்கள் சேதம் : இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
The Forecast 2 years ago திருநெல்வேலி
திருநெல்வேலி அருகே பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் பயிா்கள் மழையால் சேதமாகியுள்ளன. அவற்றிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள அருகன்குளம், சேந்திமங்களம், நாரணம்மாள்புரம், திருவண்ணாநாதபுரம் பொட்டல் ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள வயல்களில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையொட்டி மஞ்சள் பயிரிடுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டிலும் கிணறு மற்றும் குளத்தின் நீரை பயன்படுத்தி பயிரிட்டிருந்தனா். ஒரு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில், கடந்த வாரத்தில் பெய்த தொடா் மழையால் மஞ்சள் பயிா்கள் மிகவும் சேதமாகியுள்ளன. இதேபோல வாழை பயிா்களும் சேதமாகி உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையில் மஞ்சள் குலை விற்பனை களைகட்டும். இதனை கருத்தில் கொண்டு சுமாா் 3 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் சுற்றுவட்டார பகுதியில் மஞ்சள் பயிரிடப்பட்டிருந்தது. தொடா் மழையால் அந்தப் பயிா்கள் அனைத்தும் சேதமாகியுள்ளன. சில இடங்களில் அதிக தண்ணீா் வயலில் தேங்கியதால் அழுகிவிட்டது. இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். ஆகவே, அரசு முறையாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.
0 Comments