முத்தமிழ் அறிஞரின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி.
Janani G 1 year ago திருப்பூர்
திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று(11.07.2024) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு நடைபெற்ற பேச்சு போட்டியில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து பங்கு பெற்றனர்.
0 Comments