மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப.வழங்கினார்
Janani G 1 year ago திருப்பூர்
மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.2780 மதிப்பீட்டில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,560 காதொலி உள்பட ரூ.7060 மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் முதலிபாளையம், கிளாங்கொண்டல், மொண்டிபாளையம் மற்றும் விலாமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.3.11 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூட கட்டிடத்தை சுய உதவி குழு பயன்பாட்டிற்கு வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியர்கள் செந்தில் அரசன் (தாராபுரம்), ஜஸ்வந்த் கண்ணன் (உடுமலைப்பேட்டை), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாம்சாந்தகுமார், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் ஆகியோர் உள்ளனர்.
0 Comments