Loading . . .




‘‘எங்களுக்கு எப்போது இலவச பஸ் பயணம் நாயுடு சார்?” : ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா கேள்வி

The Forecast 1 year ago ஆந்திரா

நேற்று விஜயவாடா பேருந்து நிலையத்தில் இருந்து தெனாலி வரை அரசு பஸ்ஸில் டிக்கெட் எடுத்து சக பெண் பயணிகளுடன் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா பயணம் செய்தார்.

அப்போது ஒய்.எஸ். ஷர்மிளா பேசியதாவது: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பதவியேற்று 5 மாதங்கள் ஆகின்றன. ஆனால், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை அமல்படுத்தவில்லை. அவர் அளித்த சூப்பர் சிக்ஸ் தேர்தல் வாக்குறுதி என்னவானது? அவர் உடனடியாக அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

இதிலும் ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் இலவச திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை உடனடியாக அவர் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது பேருந்தில் டிக்கெட் வாங்கி பயணம் செய்த அனைத்து பெண்களும் டிக்கெட்டுகளை காண்பித்தபடி, ‘‘எங்களுக்கு எப்போது இலவச பஸ் பயணம் நாயுடு சார்?” என கோஷம் போட்டவாறு தெனாலி வரை பயணம் செய்து நூதனமான முறையில் தனது கோரிக்கையை வெளிப்படுத்தினர்.

0 Comments

Post your comment here

ஆந்திரா Relateted News