Loading . . .




இராஜபாளையம் முகவூர் கிராமத்தில் இன்று 30.4.2022 கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் மாபெரும் வட்டார சுகாதார திருவிழா MLA S.தங்கப்பாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

Arut Selvan 4 years ago தங்கபாண்டியன்

இராஜபாளையம் தொகுதியில்* இன்று (30.04.2022) முகவூர் ஊராட்சி தெற்கு தெரு இந்து நாடார் துவக்கப்பள்ளியில்   *தமிழக முதலவர் அவர்களில் அறிவுறுத்தலின்படி "கலைஞர் அவர்களின் வரும்முன் காப்போம் திட்டத்தின் (வட்டார சுகாதார திருவிழா)"* சிறப்பு மருத்துவ முகாமை  சிவகாசி சுகாதார பணி துணை இயக்குனர் Dr.N.கலுசலிங்கம் அவர்கள் முன்னிலையில் *தனுஷ் M.குமார்.,MP அவர்களும்*  நமது மக்கள் *MLA S.தங்கப்பாண்டியன் அவர்களும்*  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள்,  இராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்திய  *மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்* அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு இனி அவசர சிகிச்சைக்காக மதுரை அல்லது  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இல்லை எனவும்  மேலும் நகர்ப்பகுதியிலுள்ள அரசு  மருத்துவமனைக்கு  இணையாக ஊரக ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்படுத்திய மருத்துவர் கருணாகரபிரபு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய MP அவர்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான மருத்துவச்சேவை கிடைக்க *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்* அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறார் எனக் கூறினார். 

இந்நிகழ்வில் கலைஞர் கண்ணொளி திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களுக்கு கண் கண்ணாடி   கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவப்பெட்டகம் பயனாளிகளுக்கு முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தின் அடையாள அட்டையை MP,MLA அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு பள்ளி தாளாளர் முத்துராஜ்  வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார்  வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர் வீரபுத்திரன்  மருத்துவர்கள்   ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்   மற்றும் கழக நிர்வாகிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News