இராஜபாளையம் தொகுதி தாமிரபரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் திறந்து வைத்தார்.
The Forecast 3 years ago தங்கபாண்டியன்
இராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 2 லட்சம் (மொத்தம் 4 லட்சம்) ரூபாய் மதிப்பீட்டில் வார்டு 13 பாலவிநாயகர் கோவில் தெரு , வார்டு 9 சேத்தூர் தளவை மெயின் ரோடு போன்ற பகுதிகளில் தாமிரபரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது அதனை (18.08.2022) மாலை 5 மணி அளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், சேத்தூர் , செட்டியார்பட்டி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தாமிரபரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது அடுத்தபடியாக இராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தாமிரபரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்க மதிப்பீடு தயார் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது *விரைவில் அனைத்து கிராமங்களிலும் தாமிரபரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி* அமைக்கப்படும் எனக் கூறினார்.
இந்நிகழ்வில் சேர்மன் ஜெயமுருகன் செயல் அலுவலர் சந்திரகலா பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் துணை சேர்மன் விநாயகமூர்த்தி கவுன்சிலர்கள் மணிகண்டன் மாம்பழக்கனி பேரூர் கழக நிர்வாகிகள் சேவுகப்பாண்டியன் பேரூராட்சி பணியாளர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments