வீடுகளை பழுதுநீக்கும் பணிக்கு வீட்டிற்கு தலா 50 ஆயிரம் என 26 வீடுகளுக்கு நிதி. MLA S.தங்கப்பாண்டியன்
The Forecast 3 years ago தங்கபாண்டியன்
இராஜபாளையம் தொகுதியில் (21.09.2022) மாலை 5 மணியளவில் மீனாட்சியாபுரம் ஊராட்சி இந்திரா காலனியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பழுதுநீக்கும் பணிக்கு வீட்டிற்கு தலா 50 ஆயிரம் என 26 வீடுகளுக்கு சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அப்பழுதுநீக்கும் பணியை மேற்கொள்ள 26 பயனாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் குடியிருப்புப்பகுதி நேரில் சென்று பழுதடைந்த வீடுகளை பார்வையிட்டு பணி செய்யும் *அனுமதி ஆணைக்கடிதத்தை (Work Order) MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், அருந்ததியர் சமுதாயத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு துறைகளில் *3% உள் ஒதுக்கீடு வழங்கியர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்* தான் அவர்வழியில் நமது *தமிழக முதல்வர் அவர்கள்* அருந்ததியர் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் எனக் கூறினார் மேலும் இராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பழுதுபார்க்க சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதில் முதல்கட்டமாக இந்திரா காலனிப்பகுதி பொதுமக்களுக்கு அனுமதிக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
இந்நிகழ்வில் ஊராக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தகுமார் ரவிக்குமார் கவுன்சிலர் நவமணி ஊராட்சி மன்ற தலைவர் கிளைக் கழக செயலாளர்கள் ஆரோக்கியம் பாலமுருகன் தங்கராஜ் ஊர் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments